இந்தியர்களுக்கு ஜொகூர் மாநில அரசு இயன்ற அளவில் சேவை வழங்கும்

ஜொகூர் மாநிலத்தில் பூர்த்தியாகி இன்னும் தொடங்கப்படாமல் இருக்கும் சிம்பாங் ரெங்கம் துன் டாக்டர் இஸ்மாயில் பள்ளி, ஜொகூர் பாரு பண்டார் ஸ்ரீ அலாம் மற்றும் குளுவாங் நியோர் தோட்டப்பள்ளி ஆகியனவாகும்.

ஜொகூர் மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் தேவையை மாநில அரசு கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ற நடவடிக்கையை மேற்கொள்ளும் என ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ டாக்டர் ஷருடின் ஜாமல் கூறினார். அவற்றை கவனிப்பதற்கு தற்போது ஜொகூர் மாநிலத்தில் ஓர் இந்திய ஆட்சிக்குழு உறுப்பினர் இடம் பெற்றுள்ளார். அதனை தவிர்த்து மந்திரி பெசாரின் இந்தியர் விவகாரங்களுக்காக சிறப்பு அதிகாரி நியமனமும் செய்யப்பட்டுள்ளது. அவ்விருவரும் பிகேஆர் கட்சியை சேர்ந்தவர்களாவர்.

மேலும் இந்தியர்கள் இறப்பு காரியங்கள் செய்வதற்கு பாசீர் கூடாங்கில் 14 லட்சம் வெள்ளி செலவில் சடங்கு மையம் கட்டப்படவுள்ளதாக அவர் கூறினார்.
நவம்பர் 21ஆம் தேதி மாநில வரவு செலவு கணக்கறிக்கை தொடர்பாக விளக்கம் அளித்த பின் அவர் இத்தகவலை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + thirteen =