இந்தியர்களின் விசுவாசத்தைப் பற்றி கேள்வி எழுப்பும் அருகதை ஸக்கீருக்கு இல்லை

கோலாலம்பூர், ஆக. 12-
மலேசியாவில் உள்ள இந்தியர்களின் விசுவாசத்தைப் பற்றி கேள்வி எழுப்பும் அருகதை சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஸக்கீர் நாயக்கிற்கு இல்லை என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.ராமசாமி சாடினார்.
மலேசியாவில் அடைக்கலம் புகுந்துள்ள ஸக்கீர் நாயக், அவ்வப்போது இந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் பணச்சலவை மற்றும் தீவிரவாத குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள ஸக்கீர், இந்நாட்டில் தஞ்சம் புகுந்து தம்மைக் காப்பாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் பணச்சலவை மற்றும் தீவிரவாத குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள ஸக்கீர், இந்நாட்டில் தஞ்சம் புகுந்து தம்மைக் காப்பாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஸக்கீருக்கு எதிராக இண்டர்போல் சிவப்பு நோட்டீஸை வெளியிட்டால், இவரது விவகாரத்தில் பிரதமர் துன் மகாதீர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரா என்று தமக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றார் அவர்.
தாம் இன்னும் நீண்டநாட்களுக்கு இந்நாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஸக்கீர், மகாதீரை புகழ்பாடி வருகிறார் என ராமசாமி தெரிவித்தார்.
தமது சொந்த நாட்டிலிருந்து இந்நாட்டிற்கு தஞ்சம் புகுந்துள்ள ஸக்கீர், வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமே தவிர, இந்நாட்டில் உள்ள இந்தியர்களின் விசுவாசத்தைப் பற்றி கேள்வி எழுப்பக்கூடாது என அவர் எச்சரித்தார்.
மலேசிய இந்தியர்கள் மகாதீரை விட இந்தியப் பிரதமர் மோடியை அதிகம் விரும்புகிறார்கள் என நேற்று முன்தினம் கிளந்தான் கோத்தாபாருவில் நடந்த ஒரு மாபெரும் நிகழ்ச்சியில் ஸக்கீர் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here