இந்தியர்களின் மேன்மைக்கு அரசு சாரா இயக்கம்

0

இந்தியர்களின் மேன்மைக்கு சேவை ஆற்றுபவர்களை ஆதரிப்பது அனைத்து இந்தியர்களின் கடமையாகும். அதனை விடுத்து சேவை ஆற்றியவர்களை புண்படுத்துவதும் வேதனை அடைய வைப்பதும் ஏற்றதல்ல என மலாக்கா பண்டாரைச் சேர்ந்த டத்தோ பன்னீர் கூறினார். கடந்த 40 ஆண்டுகளாக மக்களின் சேவை
யை பாரபட்சமின்றி ஆற்றி வந்த அவர் நேற்று முன் தினம் மலாக்காவில் இந்தியர்
களின் மறுமலர்ச்சி இயக்க விளக்கக் கூட்டத்தில் பேசுகையில் அவ்வாறு கூறினார். மலாக்கா புக்கிட் கட்டிலில் டத்தோ பேசில் ஏற்பாடு செய்த இக்கூட்டம் ஓம்ஸ் அறவாரியத் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மலாக்கா மாநிலம் முழுவதும் சேவையாற்றியவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை கூறினர்.
இக்கூட்டத்தில் ஓம்ஸ். பா. தியாகராஜன் தமது சிறப்புரையில் இந்நாட்டில் இந்தியர்களுக்கென ஒரு மாபெரும் அமைப்பாக மஇகா இருந்து வருகிறது. அதில் பலர் மக்களுக்காக சேவையாற்றி உள்ளனர்.
அதில் பெரும்பாலோர் இப்போது வெளியே இருக்கிறார்கள்.
இவர்கள் இந்திய சமுதாயத்தின் அடிமட்ட பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்கள். இவர்களின் சேவை தொடர வேண்டும் என்பதற்காகவே ஓர் அரசியல் சார்பற்ற இயக்கம் அமைக்கப்பட வேண்டுமென முற்பட்டுள்ளோம்.
இவர்களின் சேவை மிகவும் தேவை.
இதனால் இந்தியர்கள் பயன் அடைய வேண்டும் என்பதற்காக இது போன்றவர்களை இணைத்து ஓர் அரசு சார்பற்ற இயக்கம் அமைக்க முன் வந்துள்ளோம் என்று பேசில் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ராவ் அதன் நோக்கம், அவசியம் குறித்து விளக்கமாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மலாக்கா திபோங்
இடை நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் சைமன், ஜாசின் தொகுதி சோம சுந்தரம், மஸ்ஜிட் தானா குணா, உட்பட பலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =