இந்தியர்களின் பாரம்பரிய சின்னம் மதுரை வீரன் ஆலயம் பாதுகாக்கப்பட வேண்டும்

20ஆம் நூற்றாண்டில் இந்திய ரயில் தண்டவாள உடல் உழைப்பு பணியாளர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கியது அலோர்ஸ்டார் ஜாலான் ஸ்டேஷன் மதுரை வீரன் ஆலயம். 1900ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த வழிபாட்டுத்தலத்திற்கு இன்று வரும் பக்தர்கள் ரயில் தண்டவாள ஊழியர்களின் நான்காம் தலைமுறையினர் ஆவர். இந்திய ரயில் தண்டவாள தொழிலாளர்கள் சிந்திய ரத்தத்திற்கும்,வியர்வைக்கும் அடையாளமாக இருக்கும் இந்த சிறிய ஆலயம் உடைபடாமல் தடுப்பது நமது வரலாற்று பாரம்பரிய சின்னத்தை பாதுகாப்பதற்கு சமமாகும் என்று இந்த ஆலயத்தின் பக்தர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − seven =