இணைய வசதிகள் சிறந்த தொழில்முனைவர்களை உருவாக்குகின்றது

நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட இணைய மையங்கள் உள்ளூர் மக்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கான தளமாக மட்டுமல்லாமல், சிறந்த தொழில்முனைவோரை உருவாக்கவும் உதவுகின்றது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகின்றது.
இணைய மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு பயிற்சிகள் மற்றும் திட்டங்கள் மூலம், தொழில்முனைவோர் தங்கள் வருமான ஆதாரத்தை அதிகரிக்கவும், தங்கள் தயாரிப்பு வலையமைப்பை உலகளவில் விரிவுபடுத்தவும் முடிகின்றது.
“நாடு முழுவதும் இணைய மையங்களில் மேற்கொள்ளப்படும் உருமாற்ற செயல்முறை, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றது.
“மேலும், இ-காமர்ஸ் நாட்டில் பல வணிகங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவுகின்றது” என்றார் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா.
“எடுத்துக்காட்டாக, சரவாக், சிபுவில், ரந்தாவ் பாஞ்சாங் இணைய மையத்தின் இருப்பு அங்குள்ள சமூக-பொருளாதார வளர்ச்சியிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
“இப்போது, சிபுவில் வசிப்பவர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை விரல் நுனியில் மேற்கொள்ள முடிகின்றது” என்றார் அவர்.
“நேற்று, சிபுவில் உள்ள ரந்தாவ் பாஞ்சாங் இணைய மையத்தைப் பார்வையிட எனக்கு ஒரு வாய்ப்பு
கிடைத்தது.
“அங்கு இருந்தபோது, சரவாக் கைவினைப்பொருட்கள், மொன்ஸ்டர் பர்கர் மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற தங்கள் தயாரிப்புகளை இணையம் மூலம் காட்சிப்படுத்திய சில தொழில்முனைவோருடன் நான் உரையாடினேன்.
“தொழில்முனைவர்கள் தங்கள் தயாரிப்புகளை உலகளவில் விற்பனை செய்ய இணைய வசதி
பெரிய தூண்டுகோலாக இருக்கின்றது என்பதை நான் உணர்ந்தேன்.
“இணையம் மூலம் பல தொழில்முனைவர்கள் தங்கள் வியாபாரத்தில் வெற்றி கண்டதை என்னால் உணர முடிந்தது. “ஆகையால், இந்த நாட்டில் உள்ள
அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட்ட இணைய வசதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
“ஏனெனில் ஒவ்வொரு வணிகரும் இதன் மூலம் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும். “என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 5 =