இணையாக மற்றொரு மாநாடா? நடவடிக்கை நிச்சயம்

0

இவ்வார இறுதியில் நடைபெறவிருக்கும் பிகேஆர் பேராளர்கள் மாநாட்டிற்கு இணையாக மற்றொரு மாநாட்டை நடத்தத் திட்டமிடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பிகேஆர் தகவல் பிரிவு தலைவர் சம்சுல் இஸ்கண்டார் கூறினார்.
இவ்வார இறுதியில் மலாக்காவில் பி கே ஆர் பேராளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மற்றொரு மாநாட்டை சில தரப்பினர் நடத்தினால் நடவடிக்கை நிச்சயம் என்றார் அவர். அப்படி மற்றொரு மாநாடு நடத்தப்பட்டால் கட்சியின் விதிமுறைகளுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நினைவுறுத்தினார்.
அன்றைய தினம் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் தரப்பினர் மற்றொரு மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
பிகேஆர் பேராளர்கள் மாநாட்டை வரும் டிசம்பர் 5 முதல் 8ஆம் தேதி வரை மலாக்காவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரே பி கேஆர் பேராளர்கள் மாநாடுதான் நடத்தப்படும் என பிகேஆர் தலைமைத்துவ மன்றத் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
கட்சியில் நிலவிவரும் உட்பூசல்களுக்கு, இந்த மாநாட்டில் பேசி தீர்வு காணலாம் என அவர் நினைவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =