இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் ப்ரோமோ வீடியோ

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ப்ரோமோ வீடியோவில் லைவ் கேமரா அம்சம் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் நேரலை வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர முடியும்.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. இது கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

கேலக்ஸி ஏ21எஸ் ப்ரோமோ வீடியோ ஸ்கிரீன்ஷாட்

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி , எக்சைனோஸ் 850 பிராசஸர், கைரேகை சென்சார், என்எஃப்சி, ப்ளூடூத் 5 மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =