இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரென்டர்கள்

0

சாம்சங் நிறுவனம் 2020 ஆண்டிற்கான தனது முதல் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடல்களை பிப்ரவரி 11-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா என மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்களுடன் சாம்சங் தனது இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி இசட் ஃப்ளிப் மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி இசட் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தற்சமயம் வெளியாகி இருக்கும் ரென்டர்களில் புதிய ஸ்மார்ட்போன் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதனை பார்க்க கடந்த ஆண்டு அறிமுகமான மோட்டோ ரேசர் போன்று காட்சியளிக்கிறது. இதன் டிஸ்ப்ளேவை சுற்றி பிளாஸ்டிக் பெசல்கள் வழங்கப்படுகின்றன.

கேலக்ஸி இசட் ஃப்ளிப் ரென்டர்

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ஹின்ஜ் அமைப்பை சாம்சங் முந்தைய கேலக்ஸி ஃபோல்டு மாடலில் இருந்ததை விட மேம்படுத்தி இருக்கிறது. முந்தைய ஸ்மார்ட்போன் போன்றே கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவிலும் ஸ்கிரீனினை பாதுகாக்கும் மெல்லிய ஸ்கிரீன் ப்ரோடெக்டர் வழங்கப்படும் என தெரிகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படலாம். இதனை சாம்சங் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் என அழைக்கும் என கூறப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே ஃபுல் ஹெச்.டி. ரெசல்யூஷனை சப்போர்ட் செய்யும் என தெரிகிறது. கேலக்ஸி நோட் 10 மாடலில் உள்ளதை போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் பன்ச் ஹோல் கேமரா அமைப்பு வழங்கப்படுகிறது.

கேலக்ஸி இசட் ஃப்ளிப் ரென்டர்

ஸ்மார்ட்போனின் பின்புறம் 1.06 இன்ச் 300×116 பிக்சல் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. வெளிப்புற டிஸ்ப்ளே டூயல் கேமரா சென்சார்களுக்கு அடுத்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. சிறிய டிஸ்ப்ளே ஆல்வேஸ் ஆன் மோட் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் குவிக் சார்ஜ் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here