இட்லி தோசைக்கு அருமையான வாழைக்காய் சட்னி

வாழைக்காயில் கூட்டு, பொரியல், வறுவல் என்று செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைக்காயில் சூப்பரான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 2
தேங்காய் துருவல் – கால் கப்
வரமிளகாய் – 5
சாம்பார் வெங்காயம் – 10
பூண்டு – 4 பல்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
புளி – தேவைக்கேற்ப
எண்ணெய் – ½ டீஸ்பூன்

செய்முறை

  • வாழைக்காயை தோல் நீக்கி நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய் , பூண்டு, சாம்பார் வெங்காயம், புளி, தேங்காய் துருவல் போட்டு தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள
  • மிக்சியில் வறுத்த பொருட்களை போட்டு அதனுடன் சீரகம், கறிவேப்பிலை போட்டு நன்றாக அரைக்கவும்.
  • கடைசியாக உப்பு, வேக வைத்த வாழைக்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • இப்பொழுது வாய்க்கு சுவைமிக்க வாழைக்காய் சட்னி ரெடி…
  • இதை… இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − three =