இடைத்தேர்தலின் போது வாக்குறுதியை நிறைவேற்றுவது ஊழலல்ல

0

தஞ்சோங் பியாய் தொகுதியிலுள்ள மீனவர்களுக்கு வழங்கப்படும் ரொக்கம் தேர்தல் சட்டங்களை மீறுவதாக அர்த்தமாகாது என விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை அமைச்சர் சலேஹுடின் அயூப் கூறினார்.


காரணம் மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படலாம் என அமானா துணைத் தலைவருமான அவர் தெரிவித்தார்.


கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்த பிரதமர் இலாகா துணையமைச்சரும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமட் பாரிட், இந்த உதவியை தஞ்சோங் பியாயில் உள்ள மீனவர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


ஓர் அமைச்சர் என்ற முறையில் தஞ்சோங் பியாய் மக்களுக்கு, முன்னாள் எம்பி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தமது கடமையாகும் என அவர் சொன்னார்.


இந்தச் சிறப்பு உதவித்தொகை தஞ்சோங் பியாய் மீனவர்களுக்கு வழங்கப்படுவது கையூட்டு என குற்றஞ்சாட்டப்படுவது அடிப்படையற்ற ஒன்று என அவர் தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணி பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் அமாட் மஸ்லான் எழுப்பிய கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். தென் ஜொகூரில் மேம்பாட்டுத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட 1,513 மீனவர்களுக்கு 1,000 வெள்ளி சிறப்பு உதவி வழங்கப்படும் என ஜொகூர் மந்திரி பெசார் ஷாருடின் ஜமால் அறிவித்திருந்தார்.ஜொகூர் மீனவர் மேம்பாட்டு நிதியகத்திலிருந்து 1,513 மில்லியன் வெள்ளி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + fourteen =