இசா சமாட்டின் ஊழல் குற்றச்சாட்டின் தீர்ப்பு!

9 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட் மீதான தீர்ப்பை புதன்கிழமை இங்குள்ள உயர்நீதிமன்றம் வழங்கவுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாருமான முகமட் இசா (வயது 71 ) குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி முடிவு செய்வார். சரவாக், கூச்சிங்கில் மெர்டேக்கா பேலஸ் ஹோட்டல் கொள்முதல் செய்ததில் ஊழல் புரிந்ததாக வழக்கு விசாரணை யில் எதிர்வாதம் செய்யும்படி கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முகமட் இசாவிற்கு நீதிபதி முகமட் நஸ்லான் உத்தரவிட்டார். இந்த ஹோட்டல் கொள்முதல் கடந்த 2014ஆம் ஆண்டில் முகமட் சைட் என்பவரிடமிருந்து 9 பரிவர்த்தனையாக 30 லட்சம் வெள்ளி பெற்றதாக முகமட் இசா மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் குற்றம்சாட்டியது. இருப்பினும் இந்த குற்றச் சாட்டுகளை மறுத்து முகமட் இசா விசாரணை கோரினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + nineteen =