ஆவணமில்லாத அந்நியர்கள் உருவாவதற்கு யார் காரணம்?

ஆவணங்கள் இல்லாத அந்நியத் தொழிலாளர்கள் நாட்டில் இருப்பதற்கு மனிதர் களை கடத்தும் கும்பல்களும் அவர்களின் ஏஜெண்டுகளும் முக்கியக் காரணங்களாகும். எனவே அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று குடியேறிகளின் உரிமைகளுக் காகப் போராடும் ஒரு சமூக ஆர்வலர் அமைப்பு நேற்று வலியுறுத்தியது.
கோவிட் – 19ஐ எதிர்த்து கையாளும் நடவடிக்கைகளில் ஆவணங்கள் இல்லாத அந்நியர் கள் மேல் மலேசியா பாகுபாடு காட்டி வருவதாக குற்றம் சாட்டி அல் – ஜஸீரா தொலைக்காட்சி செய்தி வெளியாகி இருக்கும் இவ்வேளையில், இனி சி யேடிப் உத்தாரா செலாத்தான் என்ற சமூக ஆர்வலர் அமைப்பு இக்கருத் தினை வெளியிட்டது.
அச்செய்தியின் தொடர்பாக அல்-ஜஸீராவின் மேல் மலேசிய போலீஸ் துறையினர் மேற் கொண்டிருக்கும் விசாரணை பற்றி அவ்வமைப்பின் தலைமை இயக்குநர் அட்ரியன் பெரெய்ரா விடம் கருத்து கேட்கப்பட்டது.
அச்செய்தியில் வங்காள தேசத்தைச் சேர்ந்த ஓர் ஆடவர் பேட்டியளித்திருந்தார். அவரின் பேட்டி மலேசிய அரசாங்கம் மற்றும் குடிநுழைவுத் துறையினரிடையே அதிருப் தியை ஏற்படுத்தியிருந்தது.
சுகாதாரம் மற்றும் பொது பாதுகாப்பு போன்றவைகளைக் காரணம் காட்டி மலேசிய குடிநுழைவுத் துறை, ஆவணங் கள் இல்லாத அந்நியர்களை கைது செய்திருப்பதாக அச்செய்திச் சுருள் கடந்த வெள்ளிக்கிழமை ஒலிபரப்பப் பட்டது.
அந்த ஆவணப் படத்தில் பேட்டியளித்த வங்காள தேச ஆடவரை போலீசார் தேடி வருவதைப் பற்றி குறிப்பிட்ட அட்ரியன், அவ்வாடவரைத் தேடுவ தில் அரசாங்கம் குறியாக இருக் கத் தேவையில்லை என்று கூறினார்.
ஏனெனில், தாமும் தனது நாட்டைச் சேர்ந்தவர்களும் அனுபவித்ததைப் பற்றித்தான் அவர் விமர்சனம் செய்திருந்தார்.
அத்தகைய விமர்சனங்களை அரசாங்கம் கவனத்தில் கொண்டு ஆவணங்கள் இல்லாத அந்நியர்கள் மேல் எடுக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்த முற்பட வேண்டும் என்று அட்ரியன் கூறினார்.
ஆள் கடத்தும் குழுக்கள் மற்றும் அவர்களின் ஏஜெண்டு களின் நடவடிக்கைகள் காரண மாகாத்தான் நாட்டில் ஆவணங் கள் இல்லாத அந்நியர்கள் பிரச்சினைகள் உருவாகின்றன என்று அட்ரியன் எப்எம்டி என்ற ஆன் லைன் செய்தி நிறுவனத் திடம் கூறினார்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட வங்காளதேச ஆடவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரின் நடவடிக்கையானது ஏமாற்றம் அளிப்பதாகவும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாகவும் சுதந்திரத்திற்கான வழக்கறிஞர் குழுமம் (எல்எப்எல்) கூறியது.
ஆவணமில்லாத அந்நியர் களின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விமர்சனம் செய்ததற்காக அந்த வங்காளதேச ஆடவர்
மேல் எடுக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசாங்கத்தை எல்எப்எல்லின் ஒருங்கிணைப்பாளர் ஸாயிட் மாலேக் கேட்டுக் கொண்டார்.
இது போன்ற விமர்சனங் களும், கருத்துகளும் கடந்த காலத்தில் பல தரப்பினரால் கூறப்பட்ட ஒன்றுதான்.
நாங்கள் அந்த செய்திச் சுருளை கவனமுடன் ஆராய்ந் தோம். கிரிமினல் விசாரணை மேற்கொள்ளும் அளவுக்கு அதன் உள்ளடக்கத்தில் எந்த அம்சமும் காணப்படவில்லை என்று ஸாயிட் கூறினார்.
இதனிடையே, தவறான தகவல்களுடன் அந்த ஆவணப் படத்தை வெளியிட்ட அல்- ஜஸீரா மன்னிப்புக் கேட்க வேண்டு மென்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வலியுறுத்தியுள்ளார்.
உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் கூறுகையில், ஆவணமில்லா அந்நியர்கள் குடிநுழைவுச் சட்டத்தின்படியே கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
இந்நிலையில் அந்த ஆவணப்படத்தில் பேட்டியளித்த வங்காளதேச ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − 5 =