ஆவணமற்ற அந்நியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குக!


  தேசிய தடுப்பூசித் திட்டம் சீராக நடைபெற நாட்டில் உள்ள ஆவணமற்ற அந்நியர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார்.முஹிடின் ஆட்சியில் தடுப்பூசித் திட்டத்தில் பல குளறுபடிகள் நேர்ந்துள்ளதாகவும அது மக்களிடையே பல்வேறு குழப்பங்களை உருவாக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
  எனவே, ஆவணமற்ற மக்களுக்குப் பொது மன்னிப்பு கொடுக்க வேண்டுமென்றும் அதற்கு எதிர்க்கட்சிகள் தங்களின் ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்று கிட் சியாங் தெர்வித்தார்.
  நேற்று முன்தினம், ஸைபர் ஜெயாவில் சட்ட விரோதக் குடியிருப்பு ஒன்றில் 156 அந்நியர்கள் குடிநுழைவுத் துறையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து, மேற்கண்ட் கோரிக்கையை அவர் முன்வைத்தார்.
  இதனிடையே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளவரும் ஆவணமற்ற அந்நியர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
  எனினும், இக்கால கட்டத்தில் அம்மாதிரியானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அதற்காகச் சிறையில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் சட்டவிரோத அந்நியர்கள் என்பதால் அரசின் தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்படாது என்றும் தெரிவித்திருந்தார்.
  இந்தப் போக்கு நிலவினால் அரசின் ஹெர்ட் இம்மூனிட்டியை அடைய முடியாது என்ற் லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  four + 11 =