ஆள்கடத்தும் கும்பலின் மிரட்டலுக்கு அடிபணியமாட்டேன்

அந்நியர்கள் கடத்தப்படு வதை முறியடிக்கும் நடவடிக்கை யில் ஆள்கடத்தல் கும்பலின் மிரட்டலுக்குத் தாம் அடிபணியப் போவதில்லை என ஜொகூர் காவல்படைத் தலைவர் டத்தோ அயூப் கான் மைடின் பிச்சை கூறினார்.
நாட்டின் பாதுகாப்பிற்காக இந்த குற்றச் செயல்களை முறியடிப்பதில் இருந்து தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.இந்த கும்பலின் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலுக்குத் தாம் அஞ்சப்போவதில்லை என நேற்று இங்கு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.“எனக்கு எதிராக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் என் கடமையில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்” என்றார் அவர்.
நாம் நேர்மையாகப் பணியாற்றினால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. பயந்தால் போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என அவர் சொன்னார்.
இந்தோனேசியப் பிரஜைகளைக் கடத்தும் கும்பலுடன் தொடர்புடைய சுமார் 20 போலீஸ் அதிகாரிகள் மற்றும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக அண்மையில் அயூப் கான் கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 11 =