ஆளுக்கொரு நியாயம் கூடாது

0

பிகேஆர் உதவித் தலைவர் ஸுரைடா கமருடின் சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியானின் அரசியல் செயலாளர் ஜக்கரியா அப்டுல் அஹமிட்-டை நீக்குவதென்று கட்சி செய்துள்ள முடிவைக் குறைகூறினார். ஊழல் மற்றும் கையூட்டுக் குற்றங்களுக்காக அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எம்ஏசிசி ஒரு கடிதம் வாயிலாக தெரிவித்த ஆலோசனையின்படி அம்முடிவு செய்யப்பட்டதாக கட்சி கட்டொழுங்கு வாரியத் தலைவர் அஹமட் காசிம் கூறினார்.

அம்முடிவைக் குறைகூறிய ஸுரைடா ஆள் பார்த்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சொல்லி எம்ஏசிசி-இடமிருந்து கடிதம் வந்தது உண்மை என்றால் “நாட்டின் சட்டதிட்டங்களை மீறிய மற்ற கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதுதான்” முறையாகும் என அம்பாங் எம்பியுமான ஸுரைடா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + sixteen =