ஆலயங்கள் உடைக்கப்படுவதை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்

நாட்டில் இந்து ஆலயங்கள் உடைக்கப்படுவதை பெரிக்காத் தான் நேஷனல் அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.ராமசாமி நினைவுறுத்தினார். இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் நடப்பு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.
கெடாவில் உள்ள அலோர் ஸ்டார் ரயில் நிலைய நுழை வாயிலுக்கு அருகேயுள்ள 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மதுரைவீரன் ஆலயம் உடைக்கப் படவிருப்பதைப் பற்றி அவர் கருத்துரைத்தார். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் ரயில்வே மற்றும் நகராண்மைக்கழகம் இந்த ஆலயத்தைக் கட்டியதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஆலயம் உடைக்கப் படுவது ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பது குறித்து கெடா மந்திரி பெசாரிடம் தாம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்ப தாக அவர் சொன்னார். இந்த விவகாரம் குறித்து ஒரு சுமுகமான தீர்வு காண அந்த ஆலய நிர்வாகக்குழு மற்றும் இதர மாநில அரசாங்க இலாகா க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார் அவர். கெடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளுக்கு பாஸ் தலைமையிலான புதிய பெரிக்காத்தான் நேஷனல் மாநில அரசாங்கம் மதிப்பளிக்கும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
இந்த ஆலயம் கடந்த வாரம் உடைபடவிருந்தது. ஆனால் மாநில அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 10 =