ஆற்றிலிருந்து தீக்காயங்களுடன் ஆடவர் சடலம் மீட்பு!

0

இங்கு ஜாலான் செமிராக் கம்போங் பூயு ஆற்றின் பாலத்தின் கீழ் மிதந்து வந்த சடலமொன்றை போலீசார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் நண்பகல் 3.00 மணிக்கு அக்கம்பத்து மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அச்சடலத்தை மீட்டுள்ளனர்.
20 வயது மதிக்கத்தக்க அவ்விளைஞரின் சடலம் உப்பிய நிலையில் காணப்பட்டது. அவர் இறந்து மூன்று நாட்கள் அல்லது அதற்கும் மேலாகிருக்கலாம் என்று பாசீர் பூத்தே துணை சூப்ரிண்டன் முகமட் அஸ்மிர் டமிரி தெரிவித்தார்.
மீட்கப்பட்ட சடலத்தின் முகத்தில் தீக் காயங்கள் காணப்பட்டது என்றும் மேலாடை இன்றி கால் சட்டையுடன் இருந்தாகவும் அவர் கூறினார்.
இது வரை கம்போங் பூயு மக்கள் யாரும் தங்கள் உறவிர்கள் , நண்பர்கள் காணாமல் போனதாக போலீஸ் புகார் செய்யவில்லை என்றும் ஆற்றில் பாலத்தின் கீழ் ஒதுங்கிய அச்சடலம் வெளியூரைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் போலீஸ் சந்தேகிப்பதாக சூப்ரிண்டன் அஸ்மிர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − twelve =