ஆரோக்கிய வாழ்வுக்கு தரமான உணவே முக்கியம்

0

இந்நாட்டில் பல குடும்பத்தில் உள்ள குழந்தைகள் காலை சிற்றுண்டி இல்லாமலே பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டின் தலைநகரில் உள்ள பிபிஆர் அடுக்கு மாடியில் குடியிருக்கும் பி40யைச் சேர்ந்த குடும்பத்தினர் அதிகமாக நிலையில் இருக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் காலைச் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. ஆக அவர்கள் தங்களின் குழந்தைகளை கவனிப்பது மிக சிரமமாக உள்ளது. உணவுகள் தயார் செய்து கொடுப்பதில் அவர்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள் என கோலாலம்பூர் செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நாஸ்மி நிக் அகமது கூறினார்.இந்தத் தரப்பு குழந்தைகளுக்கு தாங்கள் உண்ணும் உணவில் போதிய சத்துணவு உள்ளதா என்பது தெரியாது. அதனை தெரிந்து உணர்வது முக்கியம். அதைதான் நாம் அவர்களுக்கு போதிக்க வேண்டும் என நெஸ்லே நிறுவன ஏற்பாட்டில் நடைபெற்ற மகிழ்ச்சியான ஆரோக்கியமான குடும்பம், சிறப்பான உணவுகள் எனும் கலந்துரையாடலில் பேசுகையில் நிக் நஸ்மி இவ்வாறு கூறினார். அதற்கு முன்னதாக உரையாற்றிய நெஸ்லே குழும வர்த்தக விவகார நிர்வாக இயக்குனர் நிர்மலா துரை தனது உரையில் மலேசியாவில் நூறு ஆண்டுகள் நெஸ்லே நிறுவனம் தனது வர்த்தக ஈடுபாட்டில் உள்ளது. இந்நிறுவனம் ஆரோக்கியமான சமூகத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. எதிர்கால சமூகம் சிறந்த உணவு உட்கொண்டு வளமாகவும் நலமாகவும் வாழ வகை செய்வதே தனது முக்கிய நோக்கமாக உள்ளது என்று கூறினார். அதில் குறிப்பாக பி40 பிரிவினர் அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் நலத்தில் மிக அக்கறை கொண்டுள்ளது. நெஸ்லே நிறுவனம் அரசின் சிறந்த ஆரோக்கிய உணவுகளின் திட்டத்திற்கு ஏற்ப தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
நெஸ்லே தனது தயாரிப்பில் சர்க்கரை மற்றும் சோடியம் அளவை குறைப்பதிலும் உறுதியாக இருந்து வருகிறது. அரசின் சுகாதார விழிப்புணர்வுக்கு என்றும் ஆதரவாக இருக்கும் என அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் நிக் நாஸ்மி, நிர்மலா துரையுடன் சேர்ந்து மலேசிய விவசாய பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சலிலா முகமது ஷாரிட் மற்றும் மலேசிய பணிவுமிக்க இயக்கத்தின் நிறுவனர் முகமது கமருலசிசி கருத்துரையில் பங்குபெற்றார்கள். இதன் ஒருங்கிணைப்பாளராக மீடியா பிரிமாவின் அலி இஸ்கண்டார் பொறுப்பேற்று இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 11 =