ஆரோக்கியம் நிறைந்த ஜவ்வரிசி கஞ்சி

தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி – கால் கப்
நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
காய்ச்சிய பால் – அரை கப்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
வெந்நீர் – சிறிதளவு

செய்முறை:

வாணலியில் ஜவ்வரிசியை கொட்டி பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும்.

பிறகு மிக்சியில் தூளாக்கிக்கொள்ளவும்.

அதனுடன் வெந்நீர் சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ளவும்.

காய்ச்சிய பால், நாட்டு சர்க்கரை, ஏலக்காய்தூள் ஆகியவற்றை அதனுடன் சேர்த்து கிளறவும்.

சுவையான ஜவ்வரிசிகஞ்சிரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + fourteen =