ஆயிரம் உறுப்பினர்கள் பிகேஆரில் இணைந்தனர்

ஆயிரக்கணக்கானோர் பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறுகின்றனர் என்ற பொய்ச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற வேளையில், நேற்று ஆயிரம் புதிய உறுப்பினர்கள் பிகேஆரில் இணைந்தனர்.
பிகேஆர் திராம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். கோபால கிருஷ்ணன் முயற்சியில் ஆயிரம் இந்தியர்கள் பிகேஆரில் உறுப்பினர்களாக அங்கத்துவம் பெற்றனர்.
இந்திய சமூகத்திற்கு இடையே பிகேஆர் செல்வாக்கை பெற்றுள்ளது என்பதை இது நிரூபிப்பதாக கோபால கிருஷ்ணன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இது ஆரம்பம் தான், இன்னும் அதிகமானோர் பிகேஆரில் இணைந்து கட்சியை மேலும் வலுப்படுத்துவர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பெங்கெராக் எனும் இயக்கத்தின் வழி பிகேஆர் உடைத்து விடலாம் என சில தரப்பினரின் கனவு ஒரு போதும் பலிக்காது என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =