ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுடன் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் பிரதமர்

0

கோலாலம்பூர், ஆக. 12-
நேற்று காலை இங்குள்ள தேசியப் பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்க ளுடன் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கலந்து கொண்டார்.இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு தேசியப் பள்ளிவாசலின் தலைமை இமாம் ஷேய்க் இஸ்மாயில் முகமட் தலைமையேற்றார்.
மலேசியா மற்றும் உலகளாவிய நிலையில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தாம் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கூறினார்.
இந்தப் பெருநாள் விலங்குகளைத் தியாகம் செய்யும் தினம் மட்டும் அல்ல. ஏழை முஸ்லிம் சமூகத்தினருக்கும் நாம் தியாகம் செய்ய வேண்டும் என்றார் அவர்.
முஸ்லிம்களுக்கிடையே தியாக உணர்வு மேலோங்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =