ஆபத்தான நிலையில் 1,311 பள்ளிகள்

–நாட்டில் பாதுகாப்பற்ற நிலையில் 1,311 பள்ளிகள் இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில் 73 பள்ளிகளின் கட்டடங்கள் 7ஆவது நிலை அல்லது பாதுகாப்பற்றவை என பொதுப் பணித்துறை வகைப்படுத்தியுள்ளது. சிபு நாடாளுமன்ற உறுப்பினர் Oscar Ling Chai Yew எழுப்பிய எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதில் வழங்கியபோது கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எஞ்சிய பள்ளிகள் மாநில மற்றும் மாவட்ட கல்வித்துறைகளின் தொழில்நுட்ப ஊழியர்கள் நிர்ணயித்துள்ள தரத்திற்கு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 13 =