ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 81 பேர் கைது!

0

ஆகஸ்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 81 பேர் கைது செய்யப்பட்டு, ஒரு மில்லியன் மதிப்பிலான சூதாட்டப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் மஸ்லான் ஸாலிம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 14 முதல் 30 வரை வயதுமிக்கவர்கள் என்றும், அவர்கள் இணையத்தள சூதாட்ட இணைப்பு மையங்களை நடத்தி வந்தவர்கள் என மஸ்லான் ஸாலிம் குறிப்பிட்டார்.

அவர்களிடமிருந்து மடிக்கணினிகள், கைப்பேசிகள், மோடம்கள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன. பெரும்பாலான கால் சென்டர்கள் அடுக்குமாடி வீடுகளில் நடத்தப்பட்டு வருவதாகவும், மாதமொன்றுக்கு 13,000 ரிங்கிட் வாடகையில், சீன வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கப்படுவதாக மேலும் மஸ்லான் ஸாலிம் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 2 =