ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவும் ‘கைகொடுக்கும் கை’ இயக்கம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவும் வகையில் ‘கைகொடுக்கும் கை’ இயக்கம் பல வகைகளில் சேவையாற்றிக் கொண்டிருப்பதாக அதன் தலைவர் சரவணன தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மூலம் இவ்வியக்கத்தை ஆரம்பித்தேன்.
ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், வீடற்றோருக்கு உதவி வந்தோம். இப்போது கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் எங்கள் சேவையை விரிவுபடுத்தியுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.
நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு பல வகைகளில் உதவி வரும் வேளையில் ஏழைக் குடும்பங்களுக்கும் பொருள் உதவிகளை வழங்கி வருகிறோம்.
ஓர் உணவகத்தை ஆரம்பித்து ஏழை எளியோருக்கு உணவு வழங்கும் திட்டத்தை மிக விரைவில் தொடங்கவுள்ளோம்.
தங்கள் இயக்கத்தில் 12 இளைஞர்கள் மிகத் துடிப்போடு சேவையாற்றிக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 8 =