ஆதரவற்றோருக்கு அன்னமளிக்கும் அன்னப்பூர்ணா சக்கரம் தொடக்கம்


மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மிகவும் கடுமையாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் வேளையில் வீடு, மனை, யாருடைய ஆதரவுமே இல்லாமல் ஆங்காங்கே இருக்கும் மக்களுக்கு அன்னமளிக்கும் பணியை ஈப்போ இந்து சங்க வட்டாரப் பேரவையினர் அன்னப்பூர்ணா சக்கரம் என்று தொடங்கியுள்ளனர்.
அதன் தொடக்க கட்டமாக ஈப்போ கல்லுமலை ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயத்தில் வழிபாடு செய்யப்பட்டது. அங்கு தொடங்கி ஈப்போவில் ஆதரவில்லாமல் இருப்பவர்களுக்கு ஈப்போ இந்து சங்க வட்டாரப் பேரவையின் தலைவர், ராகேஷ் உணவுகளை வழங்கினார்.
கடை வீதி, பேருந்து நிறுத்துமிடம், ஆலயம் வளாகம் என பல பொது இடங்களில் உணவில்லாமல் கிடக்கும் அவர்களுக்கு உணவளிக்கும் பணியை தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் , மூன்றாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை எங்களுடைய அன்னப்பூர்ணா சக்கரம் அவர்களை தேடிச் சென்று உணவுகளை வழங்கும். அதில் நானும் இருப்பேன்.
ஈப்போ இந்து சங்க வட்டாரப் பேரவையின் சமூகநல பிரிவின் தலைவர், கீதாதேவி சிதம்பரம் தலைமையில் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படும் என சுரேஷ் கூறினார்.
இந்த நிகழ்வில் பேராக் இந்து சங்கப் பேரவையின் சமூகநல பிரிவுத் தலைவர், பத்மாதேவி, மகளிர் பிரிவுத் தலைவர், சுந்தரராஜூ, காளியப்பன் (ஈப்போ வட்டாரப் பொருளாளர்) , ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர், மு.விவேகானந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 1 =