ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் வாட்ஸ்அப் டார்க் மோட் அப்டேட் வெளியீடு

0

வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் அம்சம் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்து வந்தது. இந்த ஆண்டு  ஜனவரி மாத வாக்கில் வாட்ஸ்அப் பீட்டா செயலியில் டார்க் மோட் அம்சத்திற்கான சோதனை துவங்கப்பட்டது. மேலும் ஐ.ஒ.எஸ். தளத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமாக டார்க் மோட் அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்தது.
அந்த வரிசையில் வாட்ஸ்அப் டார்க் மோட் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் லைட் மற்றும் டார்க் தீம்களில் ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம். டார்க் தீம் முழுமையான கருப்பு நிறத்திற்கு மாற்றாக சற்றே சாம்பல் நிறம் கொண்டிருக்கிறது.
சாட் பாக்ஸ் இருள் சூழ்ந்த பேக்கிரவுண்டு கொண்டிருக்கும் நிலையில், குறுந்தகவல்கள் அனைத்தும் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. டார்க் மோட் அம்சத்தில் இரண்டு முக்கியமான அம்சங்களில் அதிக கவனம் செலுத்தியதாக வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது. 

வாட்ஸ்அப் டார்க் மோட்

ரீடபிலிட்டி: ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் சிஸ்டம் டீஃபால்ட்களுக்கு நிகராகவும் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தாத நிறங்களையும் டார்க் மோடில் வழங்க முடிவு செய்யப்பட்டது.
தகவல்களுக்கு முன்னுரிமை: பயனர்கள் ஒவ்வொரு திரையிலும் சீரான கவனம் செலுத்த உதவ வேண்டும். இதற்கு நிறம் மற்றும் வடிவமைப்பு அம்சங்களை கொண்டு மிகமுக்கிய தகவல்கள் தனியே தெரியும்படி உருவாக்கப்பட்டது.
ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளங்களை பயன்படுத்துவோர் புதிய டார்க் மோட் அம்சத்தினை சிஸ்டம் செட்டிங்களில் செயல்படுத்திக் கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கும் முந்தைய இயங்குதளங்களை பயன்படுத்துவோர் வாட்ஸ்அப் செட்டிங் — சாட்ஸ் — தீம் — டார்க் போன்ற ஆப்ஷன்களை செயல்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 1 =