ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்

அபிஃப் பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து டாக்டர் அபிஃப் பஹாருடின் நேற்று விலகினார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பிகேஆரின் பேராளர் மாநாட்டில் அஸ்மின் அலிக்கு ஆதரவாக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து, சதி வேலைகளில் ஈடுபட்டதாக காரணம் கோரும் ஒழுங்கு நடவடிக்கைக் கடிதத்தைப் பெற்ற பின்னர், அவர் தமது பதவி விலகல் கடிதத்தை மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவிடம் சமர்ப்பித்துள்ளார். ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலும் அவர் இன்னும் செபெராங் ஜெயாவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் செபெராங் ஜெயாவில் இரு தவணைகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் தாம் கட்சிக்குக் கட்டுப்படுவதாகவும் தம்மைக் கட்சியிலிருந்து நீக்கினால், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =