ஆடவர் அடித்துக் கொலை; 5 இந்திய இளைஞர்களுக்கு வலைவீச்சு

0

காஜாங், செப். 15-
ஆடவர் ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் 5 இந்திய இளைஞர்களை போலீஸார் தேடி வருவதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஸாய்ட் ஹஸான் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி காஜாங் ஜேட் ஹில் குடியிருப்பில் தன் காதலன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக பெண்மணி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
21 வயதான இந்நபர், கடுமையாகத் தாக்கப்பட்டதால் காஜாங் மருத்துவமனையில் மரணமடைந்தார். இச்சம்பவத்தை 302 கொலைக் குற்றச்சாட்டின் கீழ் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காஜாங் சுங்கை சுவாவைச் சேர்ந்த என்.விஷ்ணு (வயது 29), பி.சுகுமாரன் (வயது 31), கிள்ளான் பண்டார் புத்ரியைச் சேர்ந்த கே.குகநேசன் (வயது 25), காஜாங் ஆஸா ஜெயாவைச் சேர்ந்த எஸ்.தினகரன் (வயது 30), காஜாங் தாமான் செமராக்கைச் சேர்ந்த ஆர்.நாவுக்கரசன் (29) ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி விக்ரம் சின்னையாவை 019-4737108 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − seven =