
அனைத்து வியாபாரிகளும் தங்களது வியாபாரத்தைத் தொடங்குவதற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்க வேண்டும் என மைக்கி தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.அரசாங்கம் அனைவருக்கும் நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஜவுளி மற்றும் சிறு வியாபாரிகளும் வியாபாரம் செய்ய அனுமதிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.ஆடம்பர உள்ளாடைக் கடைகள், தளவாடப் பொருட்கள் விற்கும் கடைகள், பேரங்காடிகள் இந்த எம்சிஓ காலகட்டத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆனால் சிறு வியாபாரிகளும் ஜவுளிக் கடைக்காரர்களும் முடி திருத்தும் நிலையங்களும் தங்களது கடையைத் திறக்க அனுமதி மறுக்கப்படுகிறது.பூஜைப்பொருட்கள் விற்கும் கடைகளும் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை உணவகங்கள் திறக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இந்த நேரத்தை நீட்டிக்க அரசு முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.