ஆசை வார்த்தைகளை நம்பி வெ. 3 லட்சத்திற்கும் மேல் சுற்றுலா நிறுவனத்திடம் ஏமாற்றம்

0

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நாடு தழுவிய அளவில் இலவச சுற்றுலா வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறிய ஒரு சுற்றுலா நிறுவனத்தை நம்பி தாம் 3 லட்சம் வெள்ளிக்கு மேல் ஏமாந்து போய்விட்டதாக ராணி வீ.ராஜரத்தினம் என்பவர் தமிழ் மலரிடம் தெரிவித்தார்.
நான் கடந்த 2017ஆம் ஆண்டு டூசுன் லைப்ஸ்டைல் சென். பெர்ஹாட் மற்றும் டி நூர் பாத்திஹா மார்க்கெட்டிங் என்ற பெயரில் இயங்கிய அந்த சுற்றுலா நிறுவனத்தில் ஒரு உறுப்பினராக இணைந்தேன்.
அந்நிறுவனம் உள்நாட்டில் இருக்கக் கூடிய ஏராளமான சுற்று லாத்தலங்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்கிறது என்றும் அதில் உறுப்பினராக இணைய குறைந்த அளவிலான பதிவு கட்ட
ணத்தையே செலுத்த வேண்டும் என்ற விதிமுறையும் இருந்த தாலேயே அதில் நான் அங்கத்தின ராகச் சேர்ந்தேன்.
பத்து கேவ்ஸில் நான் ஒரு பாலர் பள்ளியை வைத்து நடத்துகிறேன். அந்த பாலர் பள்ளியில் உள்ள பிள்ளைகளையும் அவர்களது பெற்றோர்களையும் இந்த சுற்றுலாத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை மனதில் நிறுத்தியே நான் இதில் சேர்ந்தேன்.
தொடக்கத்தில் லங்காவி, பங்கோர் என்ற உள்நாட்டு சுற்றுலாத் தலங்கள் மட்டுமின்றி தாய்லாந்திலுள்ள ஹட்யாய்க்கும் எங்களை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர். அது வரையில் அந்த நிறுவனம் எந்தவொரு பிரதிபலனும் இன்றி சேவை அடிப்படையிலேயே இந்த வாய்ப்பை வழங்கி வந்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாத வாக்கில் புதுத் திட்டம் ஒன்றை கொண்டு வருவதாக அதன் இயக்குநர் தெரிவித்தார். அந்தத் திட்டத்தில் எல்லோருமே பூரண பயனடைய வேண்டும் என்ற அடிப்படையில் பாலர் பள்ளி பெற்றோர்கள் மட்டுமின்றி இதர உறுப்பினர்களிடமும் சுமார் 335,936 வெள்ளியைத் திரட்டி அதை சிறிது சிறிதாக வங்கிக் கணக்கில் சேர்த்தது மட்டுமின்றி காசோலை மூலமாகவும் கணிசமான தொகையை அந்தக் கணக்கில் சேர்த்ததாக ராணி கூறினார்.
பணம் போட்டு சிறிது நாட்
களில் அந்த சுற்றுலா நிறுவனத்திட மிருந்து எந்தவித பேச்சு மூச்சும் இல்லை. சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வதாகவும் போனஸ் வழங்குவ
தாகவும் அவர் கூறிய வாக்குறுதிகள் செயலிழந்து போயின.
சில காலம் சபாவுக்கும் இன்னும் சில காலம் இந்தியாவுக்கும் தப்பியோடி தலைமறைவாக இருந்ததாக கேள்வியுற்றோம். இவ்வாண்டு ஏப்ரல் மாத வாக்கில் நாடு திரும்பிய அவரை கையும் களவுமாக மடக்கிய உறுப்பினர்கள் சுற்றுலாவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். நாங்கள் செலுத்திய பணத்தை எங்களிடம் திரும்ப ஒப்படையுங்கள் என்று அவரை உலுக்கிக் கேட்டோம்.
ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்தையும் கொடுத்துவிடுவ தாக வாக்குறுதி அளித்த அவர், இன்றுவரை சல்லிக் காசுக் கூட கொடுக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பில் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் கோம்பாக் காவல் தலைமையகத்தில் முதற்கட்ட புகார் செய்திருந்தோம். அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
இப்போது 2ஆம் கட்டமாக ஆகஸ்ட் 9ஆம் தேதி புகார் செய்திருந்
தோம். இந்தப் புகாரையாவது காவல்துறை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட சுற்றுலா நிறுவனம் மீது முறையான விசாரணை நடத்தி அப்பாவித்தனமாக நாங்கள் இழந்தப் பணத்தை எங்களுக்கு மீட்டுத் தர வேண்டும் என்று ராணி தெரிவித்தார்.
இதனிடையே, இந்த நிறுவனத் தின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி எங்களைப் போல இந்தியர் கள் இதில் பணம் போடுகிறார்கள். இனியும் ஏமாந்து போகாதீர்கள். அந்தப் பணத்தை எதாவது வங்கியில் சேமித்து வையுங்கள். உங்கள் எதிர்காலத்திற்கு அது உதவும் என்று ராணியின் சகோதரி ராஜேஸ்வரி ராஜரத்தினம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + three =