ஆசை காட்டியது அம்னோ; தூக்கியெறிந்தார் அன்வார்!

கோலாலம்பூர், மார்ச் 5-
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அம்னோவுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்க இசைந்தால் அவருக்கு பிரதமர் பதவி வழங்குவதாக அம்னோ தலைவர்கள் முன்வைத்த பரிந்துரையை அன்வார் நிராகரித்துள்ளார் என்ற தகவல் அம்பலமாகியுள்ளது. 2 வாரங்களாக நடந்த அரசியல் கபட நாடகம் அரங்கேறுவதற்கு முன்பே இந்த பரிந்துரை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளை கைவிட்டு அம்னோவுடன் இணைந்தால், தமக்கு பிரதமர் பதவி வழங்க அம்னோவினர் முன்வந்ததாக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப் படுத்தினார்.
இது குறித்து பிகேஆர் செத்தியா வங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அமாட் வெளியிட்ட ஓர் அறிக்கைக்கு அவர் டுவிட்டரில் பதிலளித்தார். இருப்பினும் இது குறித்து போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மேற்கொண்டு விவரிக்கவில்லை.
தமது பக்காத்தான் ஹராப்பான் பங்காளிகளைக் கைவிட்டு ஊழல் மற்றும் குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ள அம்னோ தலைவர்களை ஏற்றுக் கொண்டிருந்தால் அன்வார் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கக் கூடும் என நஸ்மி நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். ஆனால் மக்களின் ஆணைக்குத் துரோகம் செடீநுயாமல் அன்வார் பிரதமர் பதவியை மறுத்து விட்டார் என அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை அன்வார் தம்மிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 5 =