ஆசிரியர் பயிற்சிக்கழகங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகிறதா?

மலேசியக்கல்விமுறை நாடு சுதந்திரம் அடைந்தது முதல், மிகப்பெரிய பாய்ச்சலில் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதில் நம் அரசு முனைப்புக்காட்டி வருவது அனைவரும் அறிந்ததே. தேசியமொழியைக் கைவரப்பெற்று நாட்டு வளர்ப்பிற்குப் பெரும் பங்காற்றும் கடப்பாடு அனைத்து மலேசியருக்கும் உண்டு. அதே வேளையில் தம் பண்பாடு, கலைகளை நிலைநிறுத்துவதற்குத் தாய்மொழிக்கல்வியும் ஓர் இனத்தின் தேவை என்பதை அரசு உணர்ந்தே இந்நாட்டில் 527 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட பெரும்பணத்தை ஆண்டுதோறும் செலவழிக்கிறது. எனவே தமிழ்மொழியை அடுத்தக் கட்டத்திற்குக் கடத்திச் செல்லும் தார்மீகப் பொறுப்புத் தமிழ்ப்பள்ளி தமிழாசியர்களின் கடப்பாடு எனில் மறுப்பதிற்கில்லை. இவ்வாசிரியர் சமுதாயம் முறையான கற்றல் கற்பித்தல் முறைமைகளையும், மொழி ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள நாட்டில் உள்ள ஆசிரியர் கல்விக்கழகங்களில் உள்ள தமிழ் விரிவுரைஞர்கள் பொறுப்பேற்று உள்ளனர். கற்றல் கற்பித்தல் சுமூக மாக இக்கல்விக்கழகங்களில் நடைமுறைப்படுத்துவதில் அண்மையக் காலமாக சில இடையூறுகள் தொடர்ந்து வருகின்றன. இந்த நாட்டில் உள்ள 27 ஆசிரியர் கல்வி கழகங்களில், 10 கல்விக் கழகங்களில் தமிழ் பிரிவுகள் உள்ளன. பினாங்கு மாநிலத்தில் உள்ள துவான்கு பைனூன் ஆசிரியர் கல்விக்கழகம், பினாங்கு ஆசிரியர் கல்விக்கழகம், பேரா மாநிலத்தில் உள்ள ஈப்போ ஆசிரியர் கல்விக்கழகம், கெடா மாநிலத்தில் இப்டா ஆசிரியர் கல்விக்கழகம், இப்சா ஆசிரியர் கல்விக்கழகம், ஜொகூர் மாநிலத்தில் தெமொங்கோம் இப்பிராஹிம் ஆசிரியர் கல்விக்கழகம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ராஜா மெலாவார் ஆசிரியர் கல்விக்கழகம், பஹாங் மாநிலத்தில் கோலா லிப்பிஸ் ஆசிரியர் கல்விக்கழகம் கோலாலம்பூரில் உள்ள இல்மு ஹாஸ் ஆசிரியர் கல்விக்கழகம், டெக்னிக் ஆசிரியர் கல்விக்கழகம் தமிழ்மொழியைக் தற்பொழுது கற்பிக்கும் மையங்களாகும். இந்த 10 ஆசிரியர் கல்விக்கழகங்களில் வருங்காலத்தில் தமிழ்ப்பள்ளியில் கற்பிக்கப் பயிற்சி ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர், விதிவிலக்காக ஆங்கிலம், தேசிய மொழி பாடங்கள் மேலே குறிப்பிடப்படாதக் கல்விக்கழகங்களில் பயின்ற ஆசிரியர்களையும், தமிழ்ப் பள்ளிகளுக்குப் பயிற்சி முடித்தப் பின் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேற்கண்ட ஆசிரியர் கல்விக்கழங்களில் தமிழ் தவிர மற்ற பாடங்களும் போதிக்கப்படுவதோடு முறையான செயல்முறை பயிற்சியும் வழங்கப்படுகின்றன. பயிற்சி ஆசிரியர் அனைவரும் ஐந்து ஆண்டுகள் முழுமையான கல்வியை முடித்தப் பிறகே தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்ற நியமனம் செய்யப்படுவர். தமிழ்ப்பள்ளிகளில் கற்பிக்க தேசிய மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், உடற்கல்வி, நன்னெறிக்கல்வி என இன்னும் பல பாடங்கள் ஆசிரியர் கல்விக்கழகங்களில் போதிக்கப்படுகின்றன. இக்கல்விக்கழகங்களில் பயில எஸ்.பி.எம் முடித்து, தகுதியுடைய மாணவர்கள் பயிற்சிப் பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது. இக்கல்விக்கழகங்களில் பயிற்சி ஆசிரியர்கள் பயில முதன்மைத் தேர்வுப் பாடம் (Major), இரண்டாவது பாடம் (Minor), விருப்பப் பாடம் (elektif) ஆகிய பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக அறிவியல் (தமிழ்ப்பள்ளி Tagging) கொண்ட மாணவர்களுக்கு அறிவியல் பாடம் முதன்மை பாடமாக அமையும். அடுத்தகாக அவர்கள் minor)/elekவகை பாடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். மாணவர்கள் பொதுவாக தமிழ்ப்பள்ளி (Tagging) கொண்ட மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்தைக் கடந்த காலங்களில் தேர்வு பாடமாக எடுத்து வந்துள்ளனர். இவ்வாசிரியர் சமுதாயம் தமிழ்ப்பள்ளிகளில் தமிழில் கற்பிக்க ஏதுவாக இப்பயிற்சிகள் அமைந்தன. தமிழ்ப்பாடத்தைத் தேர்வு பாடமாக எடுத்தால் தமிழ்ப்பள்ளிகளில் சிறந்த முறையில் பாடம் நடத்த இவர்களால் இயன்றது. தமிழ்மொழியில் ஆளுமை பெற்ற ஆசிரியர்களே இன்று தேவையென பல தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அண்மையக் காலமாக பயிற்சி முடித்து வரும் ஆசிரியர் குழு நன்முறையில் கற்பிப்பதில் குறைபாடுகள் உள்ளன எனப் பெரு வாரியான தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் தம் ஆதங்கத்தை வெளிப் படுத்தியுளனர். தமிழ்ப்பாடத்தைத் தேர்வு பாடமாகச் செய்யாத மாணவர்கள் அறிவியல், கணிதம், நன்னெறி, கலைக்கல்வி, உடற்கல்விப் பாடங்களைத் தமிழ்ப்பள்ளிகளில் தமிழில் போதிக்கும்பொழுது அதிகமான குளறுபடிகள் ஏற்படுகின்றன. எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகள், முறைமையற்ற மொழியாடல், அயல்மொழி பயன்பாடு, சோதனைக் கேள்விகளைத் தமிழில் தயாரிப்பதில் தடுமாற்றம், ஏற்புடமையற்ற பயிற்றுத்துணைப்பொருள் எனத் தலைமையாசிரியர்கள் குறிப்பிட்டு வகைப்படுத்துகின்றனர். இந்நிலைமைத் தொடர்ந்தால் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தமிழ் ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஆகையால் தமிழ்ப்பள்ளிகளில் போதிக்க நியமனம் பெறும் தமிழ்ப்பள்ளி கூயபபiபே கொண்ட அனைத்து ஆசிரியர்களும் தமிழ்மொழிப் பாடத்தை ஆசிரியர் கல்விக்கழகங்களில் கட்டாயம் தேர்வு செய்து கற்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. அவை: 1. சில ஆசிரியர் கல்விக் கழகங்களில் வேற்றுமொழி விரிவுரையாளர்கள் தமிழ்ப்பள்ளி வயபபiபே கொண்ட மாணவர்களைத் தமிழைத் தேர்வு பாடமாக எடுக்க விடாமல்; அவர் சார்ந்தப் பாடத்தை எடுக்க கட்டாயப்படுத்தப்படுவதாக அறியப்படுகிறது. 2. சில ஆசிரியர் கல்விக்கழகங்களில் 10 மாணவர்களுக்குக் குறையாமல் தமிழ் மாணவர்கள் இருந்தால் மட்டுமே தமிழ்மொழியைத் தேர்வு பாடமாக எடுக்க இயலும். இது பெருங்குறை. எனவே மலேசிய ஆசிரியர் கல்விக்கழகம் மாணவர்களைத் தேர்வு செய்யும்பொழுது அதிகமானோர் தேர்வு செய்யப்படுவதை உறுதிபடுத்தவேண்டும். 3. சில ஆசிரியர் கல்விக்கழகங்களில் துறைசார் அதிகாரிகளும், இயக்குநர்களும் மெத்தனப்போக்கை கடைப் பிடிப்பதால் இச்சிக்கல் மேலும் கடுமையாகிறது. தமிழ்ப்பள்ளிகளுக்குத் தயாராகும் ஆசிரியர் குழு தமிழ்மொழியில் பாண்டித்துவம் பெற இவ்வதிகாரிகள் ஆவன செய்யவேண்டும். 4. ஆங்கிலப்பாடம், அரபுப் பாடம் படிக்கும் பயிற்சி ஆசிரியர்மட்டும் துறைசார் நிர்ணயித்துள்ள பாடங்களை பயிலவேண்டும் என்பது விதியாகும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே மேற்கண்ட 10 ஆசிரியர்கள் கல்விக்கழகங்களில் பயிலும் பயிற்சி ஆசிரியர் தமிழைக் கட்டாயமாகக் கற்கவேண்டும். எஸ்.பி.எம்மில் தமிழிலில் நற்தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களே தமிழ்ப்பள்ளிகளில் போதிக்கத் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே இவர்கள் தமிழ்ப்போதனா முறைமையை முழுதாகக் கற்பதில் என்ன தடை? தமிழ்ச்சமுதாயம் இச்சிக்கலைக் களைவதில் முயலுமா? அரசியல், அரசுசாரா அமைப்பைச் சேர்ந்தோர் வாளாவிருப்பார்களா? நிலைமை இப்படியே போனால் அனைத்து உரிமைகளையும் இழந்து ஏதிலோர் ஆகிவிடுவோம். தொடர்புடைய அரசு அமைப்பிடம்; குறிப்பாக தேசிய ஆசிரியர் பயிற்சிக்கழகத்திடம் முறையீடு செய்யலாம். முடியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − sixteen =