ஆசிரியர்களின் வேலைப் பளு பாதியாகக் குறைந்தது

0

பக்காத்தான் ஆட்சியில் ஆசிரியர்களின் வேலைப் பளு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
10,208 பள்ளிகளின் 40,450 வகுப்பறைகளில் அதிவேக கூகுல் வகுப்புகள் தொடங்கப்பட்டு ஆசிரியர்கள் போதிப்பது, வீட்டுப் பாடங்களைக் கொடுப்பது மற்றும் பாட அறிக்கைகளையும் பதிவு செய்வது சுலபமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புத்தகத்தைப் பார்த்துப் போதிக்கும் முறை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் சுமையைக் குறைப்பதன் மூலம் அவர்கள் போதனைகளில் முழு கவனத்தையும் செலுத்த முடியும்.
மாணவர் வருகையை இணையத்தின் மூலம் பதிவு செய்வதோடு மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பள்ளி உணவகங்களைப் பார்வையிடும் வேலையும் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குடும்பத்தை விட்டு வெளியிடங்களில் பணியாற்றிய 15,565 ஆசிரியர்கள், குடும்பங்களுக்கு அருகில் இருக்கும் பள்ளிகளுக்கு மாற்றல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் போதிக்கும் திறனை அதிகரிக்க பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
அறிவியல், தொழில்நுட்ப போதனையை எளிதாக்க 100 டிஜிட்டல் முகப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதோடு டிவிஎட் பாட போதனையும் எளிதாக்கப்பட்டுள்ளது.
டிவெட் பயிற்சி பெற்ற 54798 (96.5 விழுக்காட்டு) மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
மாணவர்கள் அனுபவ பயிற்சியைப் பெற 16,625 தொழிற்துறை நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
மலேசிய மாணவர்கள் அனைத்துலக வாசிப்புத் தரத்தில் 415 புள்ளிகளையும், கணிதப் பாடத்தில் 440 புள்ளிகளையும், அறிவியல் பாடத்தில் 438 புள்ளிகளையும் பெற்றிருக்கின்றனர்.
மேலும் ஆசிய பல்கலைக்கழகத் தரப் பட்டியலில் மலாயா பல்கலைக்கழகம் 13ஆவதாகவும் புத்ரா பல்கலைக்கழகம் 33ஆவதாகவும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் 37ஆவதாகவும் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் 39ஆவதாகவும் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 40ஆவது இடத்திலும் முன்னேறியுள்ளதாக மஸ்லி மாலிக் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =