ஆசிரியர்களின் சேவையினால் உலக அரங்கில் வெற்றி முரசு கொட்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையின் விளைவாக இன்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலக நாடுகளுக்குச் சென்று பல போட்டிகளில் தங்கள் அறிவுத்திறத்தால், நம் நாட்டுக்காக தங்கங்களை வென்றெடுக்கும் தங்கங்கள் புறப்பட்ட இடம் தமிழ்ப்பள்ளியே என்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் பேசினார்.இந்த நிலையில், கோலகங்சார் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தில் சேவையில் மகுடமாகும். தமிழ்ப்பள்ளி நிர்வாகத்தின் தன்னலம் கருதாத தியாகத்தினால், தமிழ்ப்பள்ளிகளில் வெற்றி முரசு ஒலிக்கிறது என்றும் கேசவன் பதிவு செய்தார்.ஊத்தான் மெலிந்தாங் ஜெண்டாரட்டா மண்ணில் பிறந்த நாள் முதல் எனக்கு தமிழ் என்றால் இனிக்கும் தேன் போல். தலைவாரி பள்ளிக்கு போ என்று சொன்ன என் அன்னையை போன்று இந்த தீபாவளி விருந்தில் கலந்துகொண்டிருக்கும் அன்னைக்கு நிகரான ஆசிரியர் பெருமக்களுக்கு என் வாழ்த்துகளை கூறுகின்றேன் என்றார்.
நேற்று முன்தினம் கோலகங்சார் மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி ஒற்றுமை விருந்துபசரிப்பில் கலந்து கொண்டதுடன் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன், முன்பாக 10,000 வெள்ளியும் இன்று 3,000 வெள்ளியுடன் மொத்தம் 13,000 வெள்ளி மானியம் வழங்கியுள்ளார் என சுங்கை சிப்புட் காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியரும், கோலகங்சார் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவருமான முத்துச்செல்வன் கூறியதுடன் மேலும் தம் மகிழ்ச்சியை சுட்டிக்காட்டி பேசினார்.
இந்நிகழ்வில் தேசிய மொழி ஆரம்பப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும், கேசவனின் துணைவியாரும், தமிழாசிரியருமான தயமந்தியும் வருகை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 10 =