
ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா அணிகள் வெற்றியுடன் துவக்கின. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், ஆசிய அணிகளுக்கான 20வது ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் வரும் நேற்று துவங்கியது. சவுரவ் கோசல் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி, ‘ஏ’ குரூப்பில் வலிமையான பாகிஸ்தான், ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஈராக், இந்தோனேஷியாவுடன் இடம் பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் நேற்று 3-0 என ஈராக்கை வென்றது. இந்தியா சார்பில் ரமித் டாண்டன், மகேஷ், வேலவன் வெற்றி பெற்றனர். அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் சவுரவ் கோசல், மகேஷ், வேலவன் தங்களது போட்டிகளில் அசத்த, 3-0 என்ற கணக்கில் பிலிப்பைன்சை வென்றது. பெண்கள் பிரிவில் இந்திய அணி முதல் போட்டியில் பிலிப்பைன்சை சந்தித்தது. இதில் ஜோஷ்னா சின்னப்பா, சுனைனா, ஊர்வசி என மூவரும் தங்களது போட்டிகளில் வெற்றி பெற்றனர். முடிவில் இந்தியா 3-0 என வெற்றி பெற்றது.