ஆசிய பனிச்சறுக்குப் போட்டியில் அபிராமி 4 தங்கங்கள் வென்று சாதனை

0

பேங்காக், ஆக. 5-
மலேசிய இளம் பனிச்சறுக்கு வீராங்கனை ஸ்ரீ அபிராமி தாய்லாந்தில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு ஆசிய பனிச்சறுக்குப் போட்டியில் மீண்டும் கலக்கல் வெற்றியை பெற்றார்.
இந்தப் போட்டியில் நேற்று மீண்டும் ஒரு தங்கப் பதக்கத்தை அவர் வாகை சூடினார். இதன் படி இது வரை இப்போட்டியில் 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் அவர் பெற்றார்.
12 நாடுகளிலிருந்து 683 விளையாட்டாளர்கள் களமிறங்கிய இப்போட்டியில் கடைசி நாளான நேற்று மீண்டும் அவர் இந்த சாதனையைப் படைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 2 =