ஆசிய-பசிபிக் வட்டார கூட்டுறவு அமைப்பின் உதவித் தலைவராக டாக்டர் அப்துல் பாத்தா தேர்வு

மலேசிய அங்காசா கூட்டுறவு இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் அப்துல் பத்தா ஹாஜி அப்துல்லா அனைத்துலக ஆசிய பசரபிக் எலையன்ஸ் வட்டார கூட்டுறவு அமைப்பின் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்பதவியை ஏற்கனவே மலேசியாவை சேர்ந்த அமரர் அரச பேராசிரியர் உங்கு அப்துல் அசிஸ் உங்கு அப்துல் ஹமித் பொறுப்பேற்றிருந்தார். இந்த அமைப்பின் மற்றொரு தேசிய உதவித் தலைவராக சீன நாட்டின் கூட்டுறவு இயக்கத்தின் சை சேன்ஹோங் பொறுப்பேற்றார். இந்த இயக்கத்தின் தலைவராக இந்தியாவின் தேசிய கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த டாக்டர் சந்தரப்பால் சிங் யாடேவ் தேர்வு பெற்றுள்ளார். அப்துல் பத்தா தேர்வு மலேசிய கூட்டுறவு இயக்கங்களுக்கு கிடைத்த ஊர் அங்கீகாரமாக கருதப்படுவதாக அப்துல் பத்தா கூறினார். தனது தேர்வு மலேசியாவின் அனைத்து கூட்டுறவு அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வழிவகுத்து உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 13 =