ஆசிய குத்துச்சண்டை துபாய் நகருக்கு மாற்றம்


ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டி டில்லியில் அடுத்த மாதம் 21ஆம்தேதி முதல் 31ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த போட்டியை இங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் டில்லியில் நடக்க இருந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு சிற்றரசில் உள்ள துபாய்க்கு மாற்றப்பட்டு உள்ளது.
இந்தியாவில் உள்ள எங்களது நண்பர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் டில்லி-துபாய் என்ற பெயரிலேயே நடத்தப்படும் என்று ஐக்கிய அரசு சிற்றரசு குத்துச்சண்டை சங்கம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =