ஆகஸ்ட் 11 முதல் கோம்பாக்கில் நீர் விநியோகத் தடை

சுங்கை கோம்பாக் நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 11 முதல் 12 வரை கோம்பாக் வட்டாரத்திலுள்ள மொத்தம் 20 பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் கருத்துப்படி, சில தொழில்நுட்ப நடவடிக்கையின் காரணமாக கோம்பாக்கில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப வேலைகள் கோம்பாக்கில் ஆகஸ்ட் 11, 2020 அன்று காலை 8.30 மணிக்கு தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த தொழில்நுட்ப நடவடிக்கைகள் அனைத்து நீர் விநியோக நிலையங்களும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கும் உதவும்“ என்று ஆயர் சிலாங்கூர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கோம்பாக் வட்டாரத்தில் 20 பகுதிகளில் திட்டமிடப்பட்ட நீர் விநியோக தடை ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 12 வரை 25 மணி நேரம் வரை ஆகும் என்றும் ஆயர் சிலாங்கூர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திட்டமிடப்பட்ட நீர் விநியோக பாதிப்பால் பாதிக்கப்பட்ட 20 பகுதிகளில் பத்து 8 ஜாலான் கோம்பாக், பத்து 9 ஜாலான் கோம்பாக், பத்து 10 ஜாலான் கோம்பாக், தாமான் பெர்மாய் ஜெயா கோம்பாக், கம்போங் சுங்கை சாலாக், மலேசிய பிரிட்டிஷ் நிறுவனம், அல் அமீன் பள்ளி, சர்வதேச இஸ்லாமிய பள்ளி, தொழிற்கல்வி கல்லூரி கோம்பாக், கோம்பாக் ஒருங்கிணைப்பு பள்ளி, தாமான் முத்தியாரா, கம்போங் சுங்கை சின்சின், கம்போங் தெங்கா கோம்பாக், கம்போங் சுங்கை புசு, வில்லா பிஸ்தாரி, டேசா கெமிலாங் ஆகியவை அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 7 =