ஆகஸ்டு 10இல் மெட்ரிக்குலேஷன் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும்

0

மெட்ரிக்குலேஷன் கல்லூரி கள் ஆகஸ்டு 10இல் திறக்கப் படும் என்று அரசாங்கம் அறிவித் துள்ளது. அதற்கு முன்பு மாண வர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதற்கிடையே ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் செப்டம்பரில் திறக்கப்படும் என்றும் அறிவிக் கப்பட்டிருக்கிறது. எனினும் செப்டம்பர் மாதத்தில் குறிப்பிட்ட தேதி அறிவிக்கப்படவில்லை.
வகுப்புகள் துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மெட்ரிக்குலேஷன் மாணவர்கள் பதிந்து கொள்ள வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் செய்தியாளர்களிடம் கூறினார்.
மெட்ரிக்குலேஷன் கல்லூரி களுக்கு பதிவுகள் படிப்படியாக ஆகஸ்டு 3 லிருந்து ஆகஸ்டு 7 வரை நடைபெறும். நாடு முழு வதிலும் உள்ள 15 மெட்ரிக் குலேஷன் கல்லூரிகளில் 30,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்று அமைச்சர் இஸ்மாயில் குறிப்பிட்டார்.
செப்டம்பரில் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மறுபடியும் துவங்கப்படும். தற்போது 8,000 மாணவர்கள் அக்கல்லூரிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் 5,000 புதிய மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். எனினும் செப்டம்பர் மாதத்தில் குறிப்பிட்ட தேதியை அமைச்சர் குறிப்பிடவில்லை.
கல்வி அமைச்சால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி செயல்பாட்டுத் தர விதிமுறைகளை (எஸ்.ஓ.பி.) மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
இதற்கிடையே, இன்று ஆகஸ்டு 1லிருந்து பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருக்கிறது.
முகக்கவசம் அணியும் விதியை மீறியவர்களுக்கு ரிம. 1,000 அபராதம் விதிக்கப்படுமா என்று அமைச்சரிடம் கேட்கப் பட்டது. அவ்விதிமுறையை எவ்வாறு அமல்படுத்துவது என்பது பற்றி போலீசாருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்று இஸ்மாயில் தெளிவுப்படுத்தி னார்.
கடந்த காலங்களில் போலீஸார் அறிவுரை அல்லது எச்சரிக்கை விடுப்பது வழக்கமாய் இருந்தது. எனினும் அவ்விதிமுறைகளை எவ்வாறு அமல்படுத்துவது பற்றி காவல் துறையினரே முடிவு செய்வர் என்று இஸ்மாயில் மேலும் கூறினார். முகக்கவசம் கட்டாயமாக் கப்படும். மக்கள் ஒன்று கூடும் இடங்களின் பட்டியல் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஸாம் அப்துல்லா புதன்கிழமை அறிவித்திருந்தார். வசதி குறைந்தவர்களுக்கு மென்மையான துணிகளால் செய்யப்பட்ட முகக்கவசங்களை வழங்குவதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
உலக சுகாதார நிறுவனத் தால் அங்கீகரிக்கப்பட்ட தரவு முறைகளை அக்கவசங்கள் கொண்டிருக்கும் என்றும் அவர் உறுதி மொழி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =