அஸ்மின் கைதாவாரா? ஐஜிபி சொன்னது என்ன?

0

கோலாலம்பூர், ஜூலை 26-
சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்தால் அஸ்மின் கைது செய்யப்படுவார் என்று ஐஜிபி டத்தோஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் சொன்னதாக வெளிவந்த தகவல் குறித்து மலேசியா கினி இணையதளம் விளக்கம் ஒன்றை வழங்கியிருக்கிறது.
ஐஜிபி அண்மையில் மலாக்காவில் சொன்ன தகவல் இதுதான்: ஆபாச காணொளி விவகாரம் தொடர்பில் அஸ்மினிடம் ஆரம்ப நிலையிலேயே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கும் முடிவை சட்டத்துறை அலுவலகமே செய்யும் என்று மட்டுமே ஐஜிபி கூறினார் என்று அந்த இணையதளம் விளக்கமளித்துள்ளது. இதனிடையே அதே செய்தியாளர் சந்திப்பில், பேரா மாநில கெடிலான் தலைவரும் டத்தோஸ்ரீ அன்வாரின் அரசியல் செயலாளருமான பார்ஹாஷ் வாபா சல்வடோர் ரிஸால் முபாரக்கின் கைது சட்டப்பூர்வமானது என்றும் அவரை கைது செய்து விசாரிக்கும் உரிமை புலனாய்வுக் குழுவுக்கு உண்டு என்றும் ஐஜிபி தெரிவித்தார்.
காவல்துறை விருப்பம்போல் செயல்படாது. யாரையும் அடக்குமுறை செய்யாது. அப்படி ஒன்றை நான் அனுமதிக்கமாட்டேன். நியாயமற்ற நடவடிக்கைகள் நடக்காது என்றும் ஐஜிபி கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =