அஸ்மின் அணியினர் இன்று மாமன்னரைச் சந்திப்பர்

0

பிகேஆர் கட்சியில் இருந்து வெளியேறிய 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாமன்னரைச் சந்திக்க அட்டவணையிடப் பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது கோலாலம்பூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்திரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைபுடின் அப்துல்லா, செலங்காவ் பாரு பியான், பண்டார் துன் ரசாக் கமாருடின் ஜபார், நிபோங் திபால் டத்தோ மன்சோர் ஒஸ்மான், பத்து பகாட் டத்தோ ரஷிட் ஹஸ்னோன், சிகாமட் டத்தோஸ்ரீ சந்தாரா குமார், சராத்தோக் அலி பிஜு, புஞ்சாக் போர்னியோ வில்லி மொங்கின், ரனாவ் ஜோனதன் யாசின் ஆகியோரே அஸ்மின் அலியோடு பிகேஆர் கட்சியில் இருந்து விலகியவர்கள் ஆவர்.

இவர்களுடைய விலகலாலும் பெர்சத்து பக்காத்தானில் இருந்து விலகியதாலும் பக்காத்தான் அரசாங்கம் கலைந்தது. இதற்கி டையில் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான பிரதமர் மகாதீர் தமது பதவியையும் பெர்சத்து தலைவர் பதவியையும் துறந்ததால் நாட்டின் அரசியலில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது.

அமைச்சரவை கலைக்கப்பட்ட நிலையில் மாமன்னர் மகாதீரை இடைக்காலப் பிரதமராக நியமித் துள்ளார். இந்நிலையில் நாடு முழுவதிலுமுள்ள அரசியல் தலைவர்கள் மாமன்னரைச் சந்திக்க கோலாலம்பூரில் முகாமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 11 =