அஸ்மினை எதிர்த்து நூருல் இஸா போட்டி!

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடைபெறலாம் என எதிர் பார்க்கப்படும் வேளையில், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரான அஸ்மின் அலியை எதிர்த்து நூருல் இஸா அன்வார் போட்டியிட தயாராகி வருகிறார். கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த புதல்வியான நூருல் இஸா அன்வார் தற்போது பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
இதற்கு முன் கெஅடிலான் துணைத் தலைவராக இருந்தார். இவ்வாண்டு பிப்ரவரி மாதம் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்வதற்கு இவர் முக்கிய பங்காற்றினார்.
கெஅடிலான் கட்சியில் இருந்து இவரின் தலைமையில் 10 பேர் வெளியேறினர். இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் அஸ்மின் அலியை வீழ்த்துவதற்கு கெஅடிலான் கட்சி தற்போது தீவிர சதுரங்க ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. அஸ்மின் அலியை வீழ்த்துவதற்கு மிகப் பெரிய சக்தியாக நூருல் இஸா விளங்குவதால், அவரே மிகப் பொருத்தமான வேட்பாளராகக் கருதப்படுகிறார்.
அஸ்மின் அலி கோம்பாக் நாடாளுமன்றம் அல்லது வேறு எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக நூருல் இஸா போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
அன்வார் கெஅடிலான் எனும் மறுமலர்ச்சி கட்சியைத் தோற்றுவித்தபோது அந்தக் கட்சியில் புத்ரி ரெபோர்மாசியாக விளங்கியவர் நூருல் இஸா ஆவார்.
இதனிடையே அஸ்மின் அலியை எதிர்த்து நூருல் இஸா போட்டியிட்டால் அதைப்பற்றி நாங்கள் அச்சமடைய மாட்டோம் என அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஸுரைடா கமாருடின் தெரிவித்துள்ளார்.
மக்களுக்குச் சேவையாற்றுவதே எங்களது குறிக்கோள். ஆகவே இதுபற்றி மேலும் கருத்துரைக்க விரும்பவில்லை என அவர் சொன்னார்.
அஸ்மினை எதிர்த்து நூருல் இஸா போட்டியிட்டால், இளம் வாக்காளர்களை அவர் மிக எளிதில் கவர்வார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + three =