அஸ்மினுக்கு எதிரான வழக்கு அரசியல் நோக்கமல்ல

0

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு எதிராக ஒரு சுற்றுலாப் பயண நிறுவனம் தொடுத் துள்ள வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்று தாம் கருதவில்லை என பிகேஆர் உதவித் தலைவர் ஸுரைடா கமாருடின் தெரிவித்தார்.
அந்த சுற்றுலா நிறுவன உரிமையாளரின் மகனை ஆபாச காணொளி தொடர்பாக போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது தமக்குத் தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.
ஆகையால் இந்த வழக்கிற்கும் அந்த கைது நடவடிக்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நான் கருதுகிறேன். இது தற்செயலான ஒன்றுதான்” என்றார் அவர்.
அஸ்மினிடமிருந்து 328,901 வெள்ளி பயணக் கட்டணத்தைக் கோரி சுற்றுலாப்பயண நிறுவனம் ஒன்று தொடுத்துள்ள வழக்கு
குறித்து வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சருமான அவர் கருத்துரைத்தார். அந்த சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளர் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ரா
ஹிமிற்கு அணுக்கமானவர் என்று
பல இணைய தளங்கள் குற்றஞ்சாட்
டியுள்ளன. செலுத்தப்படாத கட்ட ணத்தை அந்த சுற்றுலா நிறுவனம் அண்மையில்தான் கண்டிருக்க வேண்டும் என தாம் நம்புவதாக ஸுரைடா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 19 =