அவசர கால பிரகடனம் இல்லை!

  நாட்டில் அவசர கால பிரகடனம் இல்லை என மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா முடிவு செய்துள்ளார். கோவிட் – 19 வைரஸ் தாக்கத்தை எதிர்த்துப் போராட பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பரிந்துரைத்த அவசர கால பிரகடனம் குறித்து நேற்று மலாய் ஆட்சியாளர்களுடன் பேரரசர் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நேற்று அரச முத்திரை காப்பாளர் அமாட் படில் ஸம்சுடின் அறிக்கை ஒன்றில் கூறினார்.
  இந்த பரிந்துரை குறித்து மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்து ஆலோசித்ததோடு நாட் டின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, கோவிட் -19 வைரஸ் தாக்கத்தை முறியடிப் பது அரசாங்கம் வெற்றிக் கண் டுள்ளதாக பேரரசர் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
  கோவிட் – 19 வைரஸ் தாக்கத்தை முறியடிக்கவும் கொள்கைகளை தொடர்வதும் முஹிடின் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆற்றல் இருக்கிறதென பேரரசர் நம்புவதாக அவர் சொன்னார்.
  ஆகையால் நாட்டிற்கு அல்லது மலேசியாவிலுள்ள எந்த பகுதிகளிலும் அவசர காலத்தை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என பேரரசர் கருதுவதாக அவர் தெரிவித் தார்.
  அதே வேளையில் நாட்டின் நிலைத்தன்மையை குலைக்கக் செய்யும் வகையில் அரசியல் நடத்துவதை நிறுத்தும்படி அரசியல் வாதிகளுக்கு பேரரசர் நினைவுறுத்தினார்.
  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும் 2021 பட்ஜெட், கோவிட் – 19 வைரஸ் தாக்கத்தை முறியடிக்கவும் பொருளாதாரத்தை மீட்சி நிலைக்கு கொண்டு வரவும் மிக அவசியம் என பேரரசர் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  one + 10 =