
அரசியலமைப்பு விதியைத் தற்காக்கவும் அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுக்கவும் நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிக்கும் வகையில் அவசரகாலத்தை ரத்து செய்ய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேரரசரிடம் முறையிட வேண்டுமென்று டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவசரக்காலப் பிரகடனத்தை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பேரரசரிடம் மனுவை சமர்ப்பிக்கவுள்ளனர். இதனிடையே அனைத்து பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனு ஒன்றில் கையெழுத்திட இருப்பதாக அமானா துணைத் தலைவர் சலாவுடிக் ஆயுப் உறுதிப்படுத்தினார்.
இந்த மனு இன்று அரண் மனையிடம் சமர்ப்பிக்கப்படும் என முன்னாள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் துறை அமைச்சருமான அவர் சொன்னார். இதனிடையே இன்று திங்கட் கிழமை பெஜுவாங் மாமன்ன ருக்கு மனு ஒன்றை சமர்ப்பிக்க இருப்பதாக பெஜுவாங் துணைத் தலைவர் மாசூக்கி ஹயா கூறினார். அவசரக் கால பிரகடனம் குறித்து பேரரசருக்கு கடிதம் அனுப்பும்படி அனைத்து நாடாளு மன்ற உறுப்பினர்களையும் டத்தோஸ்ரீ அன்வார் ஏற் கெனவே கேட்டுக்கொண்டிருந்தார்.