அல் ஜஸீராவுக்கு பேட்டி கொடுத்த வங்காளதேச பிரஜை விரைவில் வெளியேற்றம்

மலேசியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு பேட்டிக் கொடுத்த வங்காளதேச பிரஜை முகமட் ரேஹான் மிக விரைவில் நாட்டில்
இருந்து வெளியேற்றப் படுவார் என்று தேசிய குடிநுழைவுத் துறை இயக்குநர் கைருல் நேற்று தெரிவித்தார்.
கோவிட் -19 காலக்கட்டத்தில் மலேசியாவில் அந்நியத் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுவதாக இந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணப் படத்தில் இவர் பேட்டிக் கொடுத்திருந்தார்.
அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் மலேசிய
அரசாங்கம் கையாண்டு வரும் போக்கு குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கிய வங்காளதேசத்தை சேர்ந்த முகமட் ரேஹான் இதற்கு முன்னர் விசாரிக்கப்பட்டார்.
மேலும் இவருக்கு எதிரான போலீசார் விசாரணையை முடித்து விட்டதாக கைருல் தெரிவித்தார். முகமட் ரேஹானின் வேலை பெர்மிட் ரத்துச்செய்யப்பட்டதால் அவர் நாட்டிலிருந்து வெளியேற்றப் படலாம் என நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா கூறியிருந்தார்.
அவர் மிக விரைவில் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்டு 31ஆம் தேதியில் தான் வங்காளதேசம் செல்வதற்கான விமானம் இருக்கிறது என்று கைருல்
குறிப்பிட்டார். அதுவரை அவரது பெயர் குடிநுழைவுத்துறையின் கறுப்புப் பட்டியலில் இருந்து வரும் என்று நேற்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + fourteen =