அல்- சபாப் மலேசிய பயங்கரவாதிக்கு 15 ஆண்டு சிறை

சோமாலியாவின் பயங்கரவாதக் கும்பலான அல்-சபாப் கும்பலில் இணைந்து அங்கு தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மலேசியரான அமாட் முஸ்தாக்கிம் அப்துல் ஹமிட் என்பவருக்கு 15 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அங்குள்ள தூதரகத்தின் அதிகாரி அபிமான் என்பவர் அந்தத் தண்டனையை ஆயுதப்படைகளின் நீதிமன்றத் தலைவர் கர்னல் ஹசன் அலி நூல் சோ யூ தோ அளித்ததாகத் தெரிவித்தார். எனினும், சோமாலியா நீதித்துறையின் மூலம் அமாட் முஸ்தாக்கிம் அப்துல் ஹமிட்(34) தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். பயங்கர நடவடிக்கையில் ஈடுபட்டதாக 2019இல் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அமாட் முஸ்தாக்கிம் சோமாலியாவில் 2015-2016 ஆம் ஆண்டில் சோமாலியாவுக்குச் சென்றதாகத் தெரியவருகிறது. அதே காலகட்டத்தில் பல நாடுகளில் இருந்தும் தீவிரவாதிகள் சோமாலியாவில் நுழைந்து அங்குள்ள தீவிரவாத இயக்கங்களில் ஈடுபட்டு உள்நாட்டுப் போரில் பங்கு கொண்டதாகத் தெரிகிறது. அந்த அல்-சபாப் பயங்கரவாதக் குழு சோமலியாவிலும் அண்டை நாடுகளிலும் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் அது அல்-கய்டா தீவிரவாதக் குழுவிலும் இணைந்து பல வெடிகுண்டு தாக்குதலையும் நிகழ்த்தி ஆயிரக் கணக்கான பொதுமக்கள் மரணமடைவதற்குக் காரணமாகவும் இருந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 4 =