அறக்கட்டளை மாநாட்டில் உரையாற்ற ஒபாமா மலேசியா வந்துள்ளார்

0

ஒபாமா அறக்கட்டளையின் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கோலாலம்பூர் வந்துள்ளார்.
ஆசியா-பசிபிக் வட்டாரத்தைச் சேர்ந்த 200 இளம் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கும் அம்மாநாட்டில் அவர் உரையாற்றவிருக்கிறார்.
ஆகக் கடைசியாக 2015ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள அவர் இங்கு வந்திருந்தார்.
கடந்த வாரம் ஒபாமாவின் துணைவியார், மிட்சல் மற்றும் ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜூலியா ரோபர்ட்ஸ் ஆகியோர் இந்த மாநாட்டில் உரையாற்றிச் சென்றுள்ளனர்.ஒபாமா, ஆசியா-பசிபிக் வட்டாரம் எப்படி இயங்க வேண்டுமென்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்.
அந்த மாநாட்டில் தலைமைத்துவத்துக்கான உரைகள், தலைமைத்துவ பண்புகளை உயர்த்தும் பயிற்சிகள், கருத்தரங்குகள் நடைபெறுவதுடன் இளம் தலைவர்களிடையே நல்லுறவை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகளும் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =