அர்மீனியா – அஜர்பைஜான் இடையே தொடரும் பதற்றம்: நகார்னோ கராபக்-ல் பறக்கும் அஜர்பைஜான் கொடி

அர்மேனியா மற்றும் அஜர்பைஜான் படைகளுக்கு இடையேயான மோதல்கள் முடிவிற்கு வரும் என்ற நம்பிக்கையை குறைக்கும் வகையில்,  நகார்னோ கராபக் மலைப்பகுதியில் அஜர்பைஜானின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.

நகார்னோ கராபக் பகுதியின் முக்கிய நகரமான ஸ்டெப்கனகெர்ட்-ல் அஜர்பைஜானின் கொடிகள் பறக்கும் வரை போர் நிறுத்தம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று அஜர்பைஜான் படைத்தலைவர் இல்சத் ஹபிலோவ் கூறியுள்ளார்.

அஜர்பைஜானின் ஒரு பகுதியாக நகோனோ கராபக் மலைப்பகுதியை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்ட போதிலும், அங்கு அர்மேனிய ஆட்சி தான் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − thirteen =